கட்டாயமாக்கப்பட்ட சணல் பை
இந்தியாவின் தேசியப் பொருளாதாரத்தில் சணல் தொழில் முக்கிய பங்காற்றுகிறது. சணல் பேக்கேஜிங் பொருள் சட்டத்தின் கீழ் இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி 3.7 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் 40 லட்சம் விவசாயிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பை சணல் துறை வழங்குகிறது.
சணல் தொழில்துறையின் மொத்த உற்பத்தியில் 75% சணல் சாக்கு பைகள் ஆகும். இதில் 90% இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில கொள்முதல் முகமைகளுக்கு வழங்கப்படுகிறது, மீதமுள்ளவை நேரடியாக ஏற்றுமதி/விற்பனை செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான சணல் சாக்கு பைகளை உணவு தானியங்களை பேக்கிங் செய்வதற்கு அரசு கொள்முதல் செய்வதன் மூலம் சணல் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் விளைபொருட்களுக்கு உத்தரவாதமான சந்தை உறுதி செய்யப்படுகிறது.
2021-22-க்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டாய பேக்கேஜிங் விதிமுறைகளின்படி உணவு தானியங்களில் 100% மற்றும் சர்க்கரையில் 20% கட்டாயமாக சணல் பைகளில் பேக் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில், மேற்குவங்காளம், பிஹார், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் சணல் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது