எஸ்ஐபி & ஆர்டி முறை சேமிப்பில் எது சிறந்தது?
அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் கடன் ஃபண்டுகளில் சிஸ்ட மேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம்.
இந்த ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படும் நீண்டகால மூலதன ஆதாயத் துக்கு பணவீக்க சரிகட்டலுக்குப் பிறகு, 20% வரி கட்டினால் போதும். அந்த வகையில், இந்தக் கடன் ஃபண்ட் முதலீடு வரிக்குப் பிந்தைய நிலையில் ஆர்.டி மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட அதிக ஆதாயமாக இருக்கும். நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் மியூச்சுவல் ஃபண்டின் ஒரு வகையான கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.வங்கி ஆர்.டி-ஆக இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யாக இருந்தாலும், முதலீட்டை இடையில் நிறுத்தா மல் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மட்டுமே நிதி இலக்குகளை நிறைவேற்ற முடியும்.
யாராக இருந்தாலும், முதலீடு செய்கிற தொகை எவ்வளவாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து சீராக முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால நிதித் தேவைகளை சுலபமாக அடைய உதவும். அப்போது மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் என்பது இருக்காது. இதைச் செய்ய, ஒருவர் இளமையாக மற்றும் நடுத்தர வயதாக இருக்கும் போது, நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டு களில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். இங்கேதான் சீரான முதலீடு என்கிற நடைமுறை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.