நடுத்தர மக்கள் ஜிஎஸ்டியிலிருந்து விடுபட… மறுபடியும்… மஞ்சப்பையை தூக்குங்க…
இது பழைய ஸ்டைல்தான்..
- வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும்.
- பயணத்தின் போது புளி சாதம், லெமன் சாதம், வசதி இருந்தால் வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லவும் ( டப்பால கட்டுங்க கவர்ல கட்டின ஜிஎஸ்டி வரும் )
- அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூட இல்லேன்னா மஞ்ச பை எடுத்திட்டு போய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை சாமான் வாங்குங்க.
- வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதாவது ஸ்பெஷல் உணவு தயார் செய்து சாப்பிடுங்க.
- திரைப்படத்தை மல்டிபிளெக்ஸ் அல்லாத திரையரங்குகளில் பாருங்க
- விடுமுறை நாட்களில் மால், ஷாப்பிங் னு போகாம பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம் .
- காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க .
- பழைய பழக்கங்கள் போல, நன்பர்கள் டூர் போனால், நண்பர்கள் எவராவது ஒரு வீட்டில் தங்குங்கள்
- சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வேலையே செய்ய முயற்சி பண்ணலாம் .
- இப்படி செய்தால் உடல் ஆரோக்கியமாகும், மிகப்பெரும் பணம் மிச்சமாகும், சொந்தம் பெருகும், மனைவி கணவன் பாசம், அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும், நட்பு வட்டங்கள் உண்மையாகும், உண்மையான பழைய இந்திய மீண்டும் பிறக்கும்.