வங்கியில் மினிமம் பேலன்ஸ், அபராதத்தில் இருந்து தப்பிக்க என்ன வழி..?
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அதன் கிளை அமைந்திருக்கக் கூடிய பகுதியின் வளர்ச்சிக்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையை நிர்ணயம் செய்யப்படுகிறது. வளர்ச்சியடையாத கிராமப்புறப் பகுதிகளில் மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை,
நகர்ப்புற பகுதிகளில் சில பகுதிகளுக்கு 500 ரூபாய், சில பகுதிகளில் 1000 ரூபாய், மெட்ரோ சிட்டியில் 5000 ரூபாய் என்று மினிமம் பேலன்ஸ் தொகை விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்த மினிமம் பேலன்ஸ் தொகையை தங்களது வங்கிக் கணக்கில் வைத்துக் கொள்ள முடியாத ஏழை எளிய மக்கள் பலரும் மாதாமாதம் அபராத தொகையை வங்கியில் செலுத்தி வருகின்றனர். இப்படி வங்கிகள் விதிக்கும் மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகையில் இருந்து தப்பிப்பதற்கான எளிய வழியே இந்த செய்தி.
ஒரு நபரின் வங்கிக் கணக்கில் 24 மணி நேரம் அதாவது இரவு 12 மணி வரை மினிமம் பேலன்ஸ் எவ்வளவு பிடித்தம் செய்கிறார்களோ அந்தத் தொகையை அந்த மாதத்தில் எத்தனை நாட்கள் இருக்கிறதோ அதில் பெருக்கினால் கிடைக்கும் தொகையை (அதாவது மினிமம் பேலன்ஸ் 1000 வூ அந்த மாதத்தின் நாட்கள் 30=30000) அந்த மாதத்தின் ஏதேனும் ஒரு நாட்களில் 24 மணி நேரம் அந்த வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இப்படி 30000 ரூபாயை மாதத்தின் ஏதேனும் ஒரு நாளில் 24 மணி நேரம் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் வைத்திருந்தால் போதும், பிறகு முழுத் தொகையை எடுத்தாலும் அந்த வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் அபராத தொகை விதிக்கப்பட மாட்டாது.
இப்படி ஒரு குறிப்பிட்ட வங்கிக்கணக்கு எவ்வளவு மினிமம் பேலன்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார்களோ, அந்த மினிமம் பேலன்ஸ் தொகையை அந்த மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் 24 மணி நேரம் வைத்திருந்தால் மினிமம் பேலன்ஸ் பிடித்தம் செய்ய முடியாது.