அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் இந்திய பணக் காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் 13 ஆண்டுகளாக தொடர்ந்து முகேஷ் அம்பானியே முதலிடத்தை தக்கவைத்து வருகிறார்.
இவருடைய சொத்து மதிப்பு 73 சதவீதம் உயர்ந்து ரூ.6.5 லட்சம் கோடியாக உள்ளது. முன்னணி 100 இந்தியப் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 14 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த சொத்து வளர்ச்சியில் முகேஷ் அம்பானி மட்டுமே 50 சதவீதத்துக்கும் மேல் பங்கு வகிக்கிறார். உலக பொருளாதாரத்தை ஆட்டிப் படைத்த கொரோனா முகேஷ் அம்பானியை மட்டும் கண்டுக்கவேயில்லை.!
முகேஷ் அம்பானிக்கு அடுத்து 2-ம் இடத்தில் கவுதம் அதானி உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 61 சதவீதம் உயர்ந்து ரூ.1.84 லட்சம் கோடியாக உள்ளது. மூன்றாவது இடத்தில் ஷிவ் நாடார் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.1.49 லட்சம் கோடியாக உள்ளது.