அதிவேக ரயில் தடங்கள் உள்ளடக்கிய தேசிய வரைவு ரயில் திட்டம்..!
சமீபத்தில் தேசிய வரைவு ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. உள்கட்டமைப்புத் திறனை அதிகப்படுத்தி, ரயில்வே சேவைகள் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட இந்த வரைவு திட்டமானது 2030-ஆம் ஆண்டுக்குள் தேவையை விட அதிகமாக திறனை ஏற்படுத்தி, 2050-ஆம் ஆண்டு வரை அதை நிலைத்திருக்க வழிவகை செய்கிறது.
கிழக்குக் கடற்கரை, கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-கிழக்கு என்று மூன்று பிரத்தியேக சரக்கு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பல்வேறு அதிவேக ரயில் தடங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு செயல் படுத்தப்படவுள்ள ரயில் தடம் மற்றும் சிக்னல் திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான தெளிவான காலகெடுக்கள் இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.