வணிகர்களுக்கு ரயில்வேயில் புதிய வசதி
ரயில்வே மற்றும் அஞ்சல்துறை சார்பில் புதிய பார்சல் சேவை திட்டம் கோவையில் 2023 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுவாக, ரயிலில் சரக்குகளை அனுப்ப சம்பந்தப்பட்டவர்களே ரயில் நிலையத்துக்கு சரக்குகளை கொண்டு செல்ல வேண்டும். ஆனால், புதிய திட்டத்தின்படி வீடுகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட சரக்குகள் அனுப்ப விரும்பும் இடத்துக்கே நேரடியாக ஊழியர்கள் சென்று சரக்குகளை பெற்று அனுப்பிவைப்பார்கள். சம்பந்தப்பட்ட இடத்துக்கே சரக்குகள் கொண்டு சேர்க்கப்படும்.
இதன் மூலம் சிரமமின்றி நாட்டின் எந்த பகுதிக்கும் ரயில்கள் மூலம் சரக்குகளை தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே அனுப்பலாம். இவ்வாறு அனுப்பப்படும் சரக்குகள் எந்த இடத்தில் உள்ளன என்பது குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.