பாலிசிதாரர்களுக்கு புதிய வசதி
காப்பீட்டு பாலிசிதாரர்களின் வசதிக்காக இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையம், ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் சேவையை தொடங்கியுள்ளது.
காப்பீடு சேவையில் குறைபாடு ஏற்பட்டு, அது தொடர்பாக காப்பீடு தாரர்கள் அளிக்கும் புகார்களுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக, காப்பீடு தீர்ப்பாய விதிமுறைகள் 2017ல் மத்திய அரசு திருத்தங்கள் செய்துள்ளது.
இதன்படி, காப்பீடு நிறுவனங்கள், பாலிசிதாரர்களின் புகார்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால், காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் ஐ.ஆர்.டி. துறையின் பிரிவில் புகார் அளிக்கலாம். இதற்காக ஒருங்கி ணைத்த குறைதீர்க்கும் ஆன்லைன் போர்ட்டலை ஒழுங்குமுறை ஆணை யம் தொடங்கி உள்ளது.
https://www.policyholder.gov.in/report.aspx என்ற இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யலாம். நீஷீனீஜீறீணீவீஸீts@வீக்ஷீபீணீவீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இமெயில் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
கடிதம் மூலம் புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் https://ww.policyholder.gov.in/uploads/cedocuments/complaintform.pdf என்ற படிவத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 155255 அல்லது 1800 425473 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் புகார் அளிக்கலாம்.
இதன்மூலம், புகாரின் நிலையை ஆன்லைனிலேயே கண்காணிக்கலாம். குறைதீர்ப்பாளர்களிடம் (ஆம்புட்ஸ் மேன்) காணொலி மூலம் விசாரணை நடத்துவார். இந்த புதிய வசதி மூலம் அலைச்சலின்றி புகார் அளிக்க முடியும்.