போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு புதுவசதி
தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனி பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கு NEFT, RTGS வசதி மூலம் பணம் அனுப்பவும், பணம் பெறவும் முடியும்.
NEFT என்பது வங்கிக் கிளை மூலம் பணம் அனுப்புவதற்கான விரைவான வழியாகும். இது எதிர்கால கட்டணங்கள், கடன் திருப்பிச் செலுத்துதல் அல்லது கடன் அட்டை கட்டணங்களுக்கு ஏற்றது. ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பணப் பரிமாற்றத்திற்கு RTGS சிறந்தது.
மே 31-ம் தேதி முதல் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் சேவை மூலமாகவும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.