மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தமிழகத்தை சேர்ந்த புதிய ஐஏஎஸ் அதிகாரி
1987ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன், தற்போது நிதித்துறை செயலாளராக உயரிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய்த்துறை, பொருளாதார விவகாரத்துறை, நிதிசேவைத்துறை, செலவினத்துறை மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை செயலாளர்களில் மிக மூத்த பதவியாக நிதித்துறை செயலாளர் பதவி கருதப்படுகிறது.
தற்போது மத்திய நிதி செயலாளராக பொறுப்பேற்கும் டி.வி.சோமநாதனுக்கு 2022&23ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தயார் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சரிசெய்து, புதிய நிதி சீர்திருத்த திட்டங்களை வகுப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.