ஐ.ஆர்.சி.டி.சி.யில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய நடைமுறை அமல்!
ரயில் பயணத்திற்கு ஆன்லைனில் ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்னை கட்டாயமாக வழங்க வேண்டும் எனவும், இவை இரண்டும் சரிபார்க்கபட்ட பின்பு தான் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி-யில் லாகின் செய்து வெரிபிகேஷன் தளத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரியாக பதிவிட வேண்டும். பின்னர், சரிபார்ப்பை உறுதிசெய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஓடிபி அனுப்பப்படும். 2 ஓடிபி-களையும் பதிவு செய்து உறுதி செய்து கொண்ட பின்னர் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.