திருச்சி மாவட்டம் துறையூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 98வது கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
இக் கடையினை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் முதல் விற்பனையை துவக்கி வைத்து வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிளை மேலாளர் முரளி துறையூர் கிளை மேலாளர் சரவணன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்