ரயில்வேயில் சரக்கு வர்த்தகத்திற்கென புதிய இணையதளம்..!
இந்திய ரயில்வேயின் சரக்கு வர்த்தக மேம்பாட்டிற்கான புதிய இணையதளம் தொடங் கப்பட்டுள்ளது. https://www.fois.indianrail.gov.in இதனை இந்திய ரயில்வே இணைய தளம் https://indianrailways.gov.inவாயிலாகவும் அணுகலாம்.
இந்த புதிய இணையதளத்தை தொடங்கி வைத்த இரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், “இந்த இணையதளம், ரயில்வேயுடன் எளிதாக வர்த்தகம் செய்வதை உறுதி செய்வதோடு சரக்கு வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் எனத் தெரிவித்தார்.