திருச்சி கே.கே.நகரில் இமை கண் மருத்துவமனை திறப்பு
திருச்சி கே.கே. நகரில் இமை பொது மற்றும் கண் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது . சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கொண்டு கலந்து மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மாநகராட்சி மேயர் அன்பழகன் , துணை மேயர் திவ்யா, திருச்சி முன்னாள் கலெக்டர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர் . மருத்துவம னையின் நிர்வாக இயக்குனர்கள் எம்.நாகூர் கனி , எஸ்.முகம்மது சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
விழாவில் இயக்குனர்கள் , பங்குதாரர்கள் , மருத் துவமனை . ஊழியர்கள் , மாநகராட்சி கவுன்சிலர்கள் , தி.மு.க. பகுதி செயலாளர் மணி வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர் . விழாவுக்கான ஏற்பாடுகளை மேலாளர் பதஹீல்லாஹ் செய்து இருந்தார்.
திறப்பு விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு இலவச கண் பரிசோத னை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இலவச பரிசோதனைக்குப் பின் கண்ணாடி தேவைப்படுவோருக்கு 50 சதவீத கட்டண சலுகையில் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.