வாசகர் விமர்சனங்கள்…
சென்ற இதழில் வெளியான உயிர் காக்கும் சுத்தம் செய்தி புதிய தொழில் முனைவோர்களுக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது. பிளிச்சிங் பவுடர் பற்றிய தகவல்களும் அருமை.
-கண்ணன், பாலக்கரை
சென்ற பிசினஸ் திருச்சி இதழில் வெளியான இ.எம்.ஐ. பற்றிய செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வட்டிக்கு பணம் வாங்குவதைவிட சேமிப்பின் மூலம் பொருள் வாங்குவதன் அவசியம் குறித்து அருமையாக வெளியிடப்பட்டிருந்தது.
–மகேஸ்வரி, உறையூர்
பழைய வாகனங்கள் மீதான பசுமை வரி சுற்றுச்சசூழலை எண்ணும் போது சரியான சட்டம் தான். ஆனால் சாமானிய மக்கள் அதை எப்படி அணுகப் போகிறார்களே..?
– ராம்குமார், கருமண்டபம்
பிசினஸ் திருச்சி இதழில் சிறிது சிறிதாக ஏராளமான செய்திகள் உள்ளன. மிகவும் பயனுள்ள தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது அருமை.
– சிவகுமார், குளித்தலை