பொதுத்துறை நிறுவன பங்குகளை கூவி விற்க தயாராகுது மத்திய அரசு
வரும் நிதியாண்டில் பொதுத் துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் செலவுகளை ஈடுகட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
எனவே ஐடிபிஐ பேங்க், பிஇஎம்எல், பவன்ஹன்ஸ், பிபிசிஎல், ஏர்இந்தியா, கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, நீல்சல் இஸ்பட் நிஜாம் உட்பட பல நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது.