இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேவை அதிகரித்து வருவதை அடுத்து, ‘ரியல் எஸ்டேட்’ மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது.
வீடுகள் பிரிவில் தேவை அதிகரித்திருப்பதோடு, பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு அலுவலக பரப்பிற்கான தேவை அதிகரித்துள்ளது.
மேலும் முதலீடு நோக்கிலும் ரியல் எஸ்டேட் துறை சிறந்தது என்றாலும், மற்ற முதலீடுகள் போலவே இதிலும் இடர் உண்டு அதனை குறைப்பதற்கான வழிகள்:
ஆய்வு:
முதலீடு செய்வதற்கு முன், சந்தை ஆய்வு அவசியம். சந்தையின் தேவை, விலை, சந்தையின் எதிர்கால போக்கு எப்படி என ஆராய்வதுடன் அதன் உள்கட்டமைப்பு வசதி, அருகில் உள்ள வர்த்தக வசதிகள், நிறுவனங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளவும்.
பரவலான முதலீடு:
சந்தை ஆய்வு சரியான முதலீட்டிற்கான சிறந்த இடத்தை தேர்வு செய்ய உதவும். ஒரே நகரில் கவனம் செலுத்துவதை விட, வேறு சந்தைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இது, இடர் தன்மையை குறைக்கும்.
வேறு, வேறு துறைகளில் முதலீடு:
வர்த்தக இடங்கள், கிடங்குகள், கடைகள் போன்றவற்றில் முதலீடு செய்வதை பரிசீலிக்கலாம். ஒரு பிரிவில் இறங்குமுகம் இருந்தாலும், மற்ற பிரிவு கைகொடுக்கும்.
நம்பிக்கைக்கு உரித்தானதா?
வீடு அல்லது வர்த்தக இடத்தை வாங்குகையில் கட்டுமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பரிசீலித்து, சரியான வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.
கால நிர்ணயம்:
நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யின் நீண்ட காலம் ஆகும். அதற்கேற்ப வாடகை வருமானம் கிடைக்கும் என்றாலும், அதற்கேற்ப முதலீட்டை திட்டமிட வேண்டும்.