வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி பரிசு..!
நீங்கள் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமா.. உங்களுக்கு இருக்கிறது ஜாக்பாட்.! தொழில்நுட்ப நிறுவனமான, ‘சிஸ்கோ’ மத்திய அரசுடன் இணைந்து, போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
‘வேளாண் சவால்’ என்று பெயரிடப்பட்ட இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும் நிறுவனங்களுக்கு ரூ.2 கோடி பரிசு. விவசாயிகளின் நஷ்டத்தை அதிகரிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சோதனைகளை மேற்கொள்வது, வருவாயை அதிகரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கே இந்த பரிசுகள். சிஸ்கோ நிறுவனத்தின் இந்த, ‘வேளாண் சவால்’ முயற்சி, விவசாயத் துறையை தொழில் நுட்பமயமாக்க உதவும் என எதிர்பார்ப்பதாக, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.