டாப் 10 பட்டியலின் முதலிடத்தில் அமுல் விளம்பரம்..!
கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், பரவலாக பார்க்கப்பட்ட டாப் 10 விளம்பரங்களின் பட்டியலை ‘யுடியூப்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றில், தமிழில் வெளியிடப்பட்ட, ‘இந்தியாவின் ருசி’ குறித்த, ‘அமுல்’ விளம்பரம், ‘டாப் 10’ பட்டியலில், முதலிடத்தை பிடித்திருக்கிறது. அடுத்த இடத்தை, மலையாளத்தில் வெளியான, ‘என்ட்ரி’ ஆப் விளம்பரமும், மூன்றாம் இடத்தை பெங்காலியில் வெளியான, ‘குட்நைட்’ விளம்பரம் பிடித்து உள்ளது.
தமிழ், மலையாளம், மராத்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட ஆறு பிராந்திய மொழி விளம்பரங்களே இந்த டாப் 10 இடத்தினை பிடித்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலானோர், பிராந்திய மொழிகளில் செய்யப்படும் விளம்பரங்களையே அதிகம் பார்ப்பதாக, ‘யுடியூப்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.