டெபாசிட் வட்டியை அதிரடியாக உயர்த்திய எஸ்பிஐ:
பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த வாரம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதையடுத்து பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
2 கோடி அல்லது அதற்கும் மேலான டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தப்பட்டுள்ளது.
7 – 45 நாட்களுக்கு 3% சதவீதமாகவும், 46 – 179 நாட்களுக்கு : 3.5% சதவீதமாகவும்,
180 – 210 நாட்களுக்கு 3.5% சதவீதமாகவும், 211 நாள் முதல் 1 ஆண்டு வரை 3.75%
1 முதல் 2 ஆண்டுக்கு 4% சதவீதமாகவும், 2 முதல் 3 ஆண்டுக்கு 4.25% சதவீதமாகவும், 3 முதல் 5 ஆண்டுக்கு 4.5% சதவீதமாகவும், 5 முதல் 10 ஆண்டுக்கு 4.5% சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.