திருச்சி மேலப்புதூரில் ஜோசப் கண்ஆஸ்பத்திரி அருகில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்காக இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கவுள்ளது.
இப்பயிற்சியில் அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி வகைகள் தயாரித்தல் மற்றும் விற்பனை, கறவை மாடுகள் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், கோழிகள் வளர்ப்பு குறித்து இலவசமாக முழுநேர பயிற்சி அளிக்கவுள்ளது. இப்பயிற்சியில் சேர வயதுவரம்பு 21 முதல் 45 வயது வரை மட்டுமே. மேலும் கல்வித்தகுதியாக எழுதப்படிக்கத்தெரிந்தால் மட்டுமே போதுமானது.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, தேர்தல் அடையாள ட்டை, பான்கார்டு, நரிகா அட்டை, சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ், வங்கி அட்டை, வருமான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 ஆகியவற்றை நேரில் கொண்டுவந்து பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் வங்கிக்கடன் பெற முழு ஆலோசனை வழங்கப்படும்.