வந்தாச்சு சத்தான பாட்டி உணவு அதுவும் துரித உணவாக….
உலகத்தில் அதிகரித்து வரும் கொல்லை நோயுடன், தொட்டுத் தொடரும் பந்தம் போல் சர்க்கரை, நீரழிவு, இரத்த அழுத்த நோய்களை உடலுக்குள் தங்க வைத்து மூன்று வேளை உணவுடன் மாத்திரையை உட்கொண்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நமது சூழலிற்கு ஏற்ற மரபு உணவுகளை புறக்கணித்ததால் சளி, காய்ச்சல் போன்ற சிறு உபாதைகளை கூட எதிர்கொள்ள சக்தியின்றி அவற்றுடன் போராடி வருகின்றனர். தொன்றுதொட்டு நம்முடைய உணவு முறையாக இருந்த சிறு தானிய உணவுகளை ஒரு தலைமுறை தவறவிட்டதன் விளைவே இந்த அவல நிலைக்கு காரணம்.
கொரோனா தாக்குதல் காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சத்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் கபசுரக்குடிநீர், நிலவேம்பு உள்ளிட்ட நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்தின் பக்கம் திரும்பினர். அத்துடன் சிறுதானிய உணவுகளின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
நம்முடைய பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளான வரகு, திணை, குதிரைவாலி, ராகி, கம்பு, கோதுமை, சிவப்பரிசி உள்ளிட்டவைகளை உண்பதால் நீரிழிவு, சிறுநீரக கல், ரத்த ஓட்டம், மலச்சிக்கல், ஆண்மை குறைபாடு, உடல் எடை குறைப்பு, உடல் சூடு, குடல் புண், ரத்தசோகை, நோய் எதிர்ப்பு சத்தி இல்லாமை, செரிமானம், புரதக் குறைபாடு, உடல் பலவீனம், உடல் உறுப்பு பிரச்சனைகள் போன்ற பல்வேறு உபாதைகளுக்கு தீர்வாக உள்ளது என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் சிறுதானிய உணவுகளை சிலர் அன்றாட உணவாகவும் உண்ணத் தொடங்கிவிட்டனர். அதேவேளையில் சிறுதானிய உணவின் மகிமை உணர்ந்த பலர் தினந்தோறும் எடுத்துக் கொள்ள நினைத்தாலும் அவற்றை சமைக்கத் தெரியாமல் தூர நின்று ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையை போக்க ரெடிமேட் இடியாப்பம், சப்பாத்தி போன்று 15 நிமிடத்தில் சமைக்கக் கூடிய துரித உணவாக சிறுதானிய உணவை மக்களிடம் கொண்டு வருகிறது நம்முடைய எஸ் ஏஜென்சி.
எங்களிடம் வரகு, திணை, குதிரைவாலி, ராகி, கம்பு, கோதுமை, சிவப்பரிசி உள்ளிட்ட சிறுதானிய சேவை உணவுகளில் – 100 சதவீதம் மைதா கலக்காத – உடலுக்கு ஏற்ற சத்தான உணவை வழங்குகிறோம்.
வாருங்கள்… உணவே மருந்தான நம்முடைய மரபு உணவை, நவீன காலத்திற்கு ஏற்றார் போல் துரித உணவாக எடுத்துக் கொள்வோம்… வரும் தலைமுறையை நோயற்ற வாழ்வு வாழச் செய்வோம்…