குறுகிய காலக் கடன் : ரிசர்வ் வங்கி புதிய முடிவு
நடப்பு நிதியாண்டின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிதிக் கொள்கை முடிவு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் கூறும் போது, ‘’குறுகிய காலக் கடனுக்கான வட்டி வீதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து 4 சதவீதமாகவே வட்டி வீதம் தொடரும். எதிர்காலத்தில் தேவைப்பட்டால், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த வட்டி வீதம் குறைப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்.
வங்கிகளுக்கான இறுதிநிலைக் கடன் வசதி (எம்எஸ்எப்) வட்டி 4.25 சதவீதமாகத் தொடர்கிறது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் தொகைக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதம் 3.35 சதவீதமாகத் தொடர்கிறது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும். முதல் பாதியில் பணவீக்கம் 5.2 சதவீதமாகவும், ஜனவரி-மார்ச் காலாண்டில் 5 சதவீதமாகவும், நிதியாண்டில் சராசரியாக 4.4 சதவீதமாகவும் இருக்கும்” என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.