பழகிக்கொள்ள வேண்டிய விஷயம்….
நிராகரிக்கப்படுவதைப் பழகிக்கொள்ள நீங்கள் சாமான் வாங்கும் ஒவ்வொரு கடையிலும் தள்ளுபடியைக் கேளுங்கள். அநேக கடைகள், ‘தள்ளுபடி இல்லை. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதைத் தாண்டி ஒன்றும் தர முடியாது’ என்பார்கள். அப்போது, நிராகரிப்பு என்பது பழகிப்போகும்.
அதே போல், உங்களுடைய உள்ளுணர்வின்மீது நம்பிக்கையை வளர்க்க சின்னச் சின்ன விஷயங்களில் உங்களுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ, அதன்படி நடந்து அந்த அனுபவத்தை வைத்து முன்னேறுங்கள்.