ஓய்வூதியர் உஷாரா இருங்க..!
பென்சன் நிதி சார்ந்த விவகாரங்களை ஒழுங்கு படுத்துவதற்காக பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தின் பெயரில் சில கும்பல்கள் மோசடியில் ஈடுபடுவதாக PFRDA எச்சரித்துள்ளது.
“பொதுமக்களுக்கு சில மர்ம நபர்கள் அழைப்பு விடுத்து ஏராளமான தொகை கோருவதாகவும், PFRDA/NPS திட்டங்களின் கீழ் நிறைய தொகை மீண்டும் கொடுக்கப்படும் என்று உறுதியளிப்பதாகவும் புகார் வந்துள்ளது. பணம் கேட்டு பொது மக்களுக்கு PFRDA சார்பில் எப்போதும் அழைப்பு விடுக்கப்படாது என்றும் PFRDA சார்பாக எஸ்.எம்.எஸ், இமெயில் அனுப்பப்படுவதில்லை எனவும், இதுபோன்ற மோசடி கும்பல்கள் குறித்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமெனவும் PFRDA எச்சரித்துள்ளது.
மேலும் ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்க வேண்டும் எனக் கூறி வங்கிக் கணக்கு விபரங்களை கேட்டால் கொடுக்க வேண்டாம் என்றும் இது போன்ற மோசடி கும்பல்கள் குறித்த விபரம் தெரிய வந்தால் சைபர் கிரைம் காவல் நிலைய இலவச உதவி எண் 155260 என்ற எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொள்ளவும் என மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது.