குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணையதளம் (www.dge.tn.gov.in) மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து 11ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்துடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் முதலாமாண்டுக்கு ரூ100, இரண்டாம் ஆண்டிற்கு ரூ.100, பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15 ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும் இந்த தகவலை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.