நிறுவன வளர்ச்சிக்கான முக்கிய மந்திரம்
இம்மந்திரம் தனி மனிதனுக்கு மட்டுமின்றி, பெரிய நிறுவனங்களுக்கும் உரியதான கொடுத்த வாக்கை காப்பாற்றுவதுதான். இன்றைய நிலையில் பல நிறுவனங்கள் இதை மறந்துவிடுகின்றனர்.
இதனால் பொருள் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை சரிவர தர மறுத்துவிடுவதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் குறைகளை தனிப்பட்ட மனிதர்களிடம் மட்டுமல்லாமல், சோசியல் மீடியா மூலம் பரவ விடுகின்றனர்.
இதனால் நிறுவனத்திற்கான மதிப்பு கெட்டு, விற்பனை குறையும் ஆபத்து உள்ளது. எனவே நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தீர்மானமாக இருந்தால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவர்.