ஆரம்பமாச்சு அரசின் அடுத்த அதிரடி தனியார்மயமாகும் அரசு வங்கிகள்
“அரசின் செலவினங்களை ஈடுகட்டும் வகையில் சிறிய மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக” நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதன்படி முதலில் குறைந்தளவு பணியாளர்களுடன் இயங்கும் பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஆகிய நான்கு வங்கிகளின் பங்குகள் விற்பனைக்கு வருகிறது. இது வங்கிகளை தனியார்மயமாக்கும் வகையில் முன்னோட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் பாங்க், பேங்க் ஆப் பரோடா உட்பட பல வங்கிகளின் பங்குகளும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.