மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு அறிய வேண்டிய விஷயங்கள்
மியூச்சுவல் பண்டு நிறுவனம் புதிதாக பண்டு வெளியிடுவதை என்.எப்.ஓ. என்பார்கள். இதன் முகமதிப்பு ரூ.10 ஆக இருக்கும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும் வேளைகளில் புதிய என்.எப்.ஓ.க்கள் வரும்.
புதிய என்.எப்.ஓ. முதலீட்டில் அதன் கடந்த கால வருமான விவரங்கள் இல்லாததால் இதில் ரிஸ்க் அதிகம் உள்ளது. இவ்வகையான பண்டுகளில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 முதல் ரூ.5,000 வரை இருக்கும்.
புதிய மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி. முறையிலும் முதலீடு செய்யலாம். புதிய என்.எப்.ஓ.வில் விண்ணப்பித்த அனைவருக்கும் யூனிட்டுகள் கிடைக்கும்.
புதிய பண்டை வாங்கு ம்போது அதன் எதிர்கால வளர்ச்சி, புதிய பண்டை நிர்வாகம் செய்யும் பண்ட் மேனேஜரின் பழைய பண்ட் வளர்ச்சி குறித்து ஆராய்ந்து முதலீடு செய்யலாம்.
புதிய மியூச்சுவல் பண்டின் என்.ஏ.வி. மதிப்பு ரூ.9.70 ஆக இருக்கும். இவைகளில் முதலீடு செய்ய நுழைவுக் கட்டணம் கிடையாது. குறுகிய காலத்தில் வெளியேறுகையில் அதற்கான கட்டணம் உண்டு.
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய அதன் விநியோகஸ்தர்கள், கிளை நிறுவனங்கள், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். முதற்கட்டமாக கே.ஒய்.சி. படிவம் நிரப்புதல் வேண்டும்.