இந்த வார திருச்சி ஸ்பெஷல் ஆஃபர் ஏரியா!
மருந்துக்கு தள்ளுபடி
திருச்சி வயலூர்ரோடு, சீனிவாச நகர் பகுதியில், இயங்கி வந்த லலிதா பார்மஸி தற்போது சீனிவாச நகர் ரெட்டைவாய்க்கால் அருகில் புதிதாய் மேலும் ஒரு கிளையை திறந்துள்ளது.
திறப்பு சலுகையாக அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சலுகைகளை அறிவித்துள்ளது. 500 ரூபாய் வரை மருந்துகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 15% தள்ளுபடியும், ரூ.500 முதல் ரூ. 1000 வரை மருந்துகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 18%தள்ளுபடியும், ரூ. 1000 முதல் 3000 வரை மருந்துகள் வாங்குபவர்களுக்கு 21%தள்ளுபடியும், மேலும், ரூ.3000க்கும் மேல் மருந்து வாங்குபவர்களுக்கு 22% தள்ளுபடியும் அறிவித்துள்ளது.
பெண்களுக்கான ஆஃபர்
திருச்சி சாஸ்திரி சாலையில் கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த shine ‘n’ fine தற்போது, தில்லைநகர் 4வது கிராஸ்மெயின் ரோட்டில் புதியபொலிவுடன் தனது விற்பனையை துவங்கியுள்ளது. இங்கு மணபெண்ணுக்கான அலங்கார நகைகள் வாடகைக்கு கிடைக்கிறது. மேலும், பேன்சி நகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பெண்களுக்கான சுடிதார், பிளவுஸ் தைப்பதற்கு என புதியதாக தையல் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா சலுகையாக பெண்களுக் கான சுடிதார், பிளவுஸ் தையலுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. சாதா பிளவுஸ் 3 தைப்பவர்களுக்கு 1 பிளவுஸ் இலவசமாக தைத்து தரப்படுகிறது. மேலும், 4 லைனிங் பிளவுஸ் தைப்பவர்களுக்கு லைனிங் இலவசமாக வழங்கப்படுகிறது. 1 ஆரி ஒர்க் பிளவுஸ் தைப்பவர்களுக்கு மற்றொரு பிளவுஸில் 50% சலுகை வழங்கப்படுகிறது. இதுபோன்று, சாதா 3 சுடிதார் தைப்பவர்களுக்கு 1 சுடிதார் இலவசமாக தைத்து தரப்படுகிறது. லைனிங் சுடிதார் 3 தைப்பவர்களுக்கு லைனிங் இலவசமாக வழங்கப்படுகிறது. லெஹங்கா தையலில் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
காலணிக்கு தள்ளுபடி
திருச்சி ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலை அம்மா மண்டபம் சாலையில் இயங்கிவரும் max footwear-யில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் அனைத்து விதமான முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பு காலனிகள் குறைந்த விலையில் தரமானதாகவும் கிடைக்கிறது. மேலும், தற்போது அனைத்து விதமான காலணிகளுக்கும் 35% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி தில்லைநகர் 4வது கிராசில்
கடந்த 1 வருடமாக இயங்கி வந்த cafe19-20 தற்போது பெரியதாய் மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளுடன் தில்லைநகர் 4 கிராஸ் மேற்கில் புதிய பொலிவுடன் ஜீலை 16ந் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது.
இதன் துவங்க சலுகையாக பீட்சாவிற்கு 40% தள்ளுபடியும், பர்கர் 2 வாங்கினால் மற்றொன்றும் இலவசம், அனைத்து சைனீஸ் உணவுகளுக்கும் 2 வாங்கினால் மற்றொன்று இலவசம். மேலும், அனைத்து இங்கு வாங்கும் அனைத்து உணவுகளுக்கும் 20% தள்ளுபடி என அறிவித்துள்ளது.
திருச்சி தில்லைநகர் 5வது கிராசில்
திருச்சி தில்லைநகர் 5வது கிராசில் கிழக்கில் இயங்கி வருகிறது Fair Price சூப்பர் மார்க்கெட். பால், மளிகை பொருட்கள், மசாலா பொருள்கள், அழகுசாதனப் பொருட்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதியுடன் இயங்கிவரும் Fair Price சூப்பர் மார்க்கெட் சிறப்பு சலுகையாக அனைத்து பொருட்களுக்கும் வருடத்தின் 365 நாட்களுக்கும் 5% முதல் 50% வரை தள்ளுபடி வழங்கி வருகிறது.
மேலும், திருச்சி நகர் பகுதி மற்றும் குறிப்பிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரியும் செய்து வருகின்றனர்.