வரியினை வட்டியின்றி செலுத்த கால அவகாசம்..!
மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி முரண்பாடு குறித்து நாடு முழுவதும் ரூ.9,52,000 மதிப்பிலான வரிப் பிரச்சனைகளுடன் 4,00,083 மனுக்கள் பல ஆண்டுகளாக தீர்வின்றி இழுபறியில் உள்ளது. இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரி வசூலிக்கும் வகையில் கடந்த 2020ம் ஆண்டு ‘விவாத் செ விஸ்வாஸ்’ திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்தது.
கொரோனா பிரச்சனையால் இத்திட்டத் தினை வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுடன் வரிச் சமாதான நடவடிக்கையில் ஈடுபடும் நபர், தான் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொண்டு செப்டம்பர் 30, 2021 வட்டியின்றி செலுத்தலாம். எனினும் கூடுதல் கட்டணத்துடன் தொகையை செலுத்துவதற்கான கடைசி தேதி அக்டோபர் 3க்குப் பின்னர் நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.