காணாமல் போன பத்திரம் மீண்டும் பெற…
பத்திரம் காணாமல் போனால், பத்திரம் காணாமல் போன பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்து அதற்குரிய ரசீது பெற வேண்டும். மேலும் இத்தகவலை கொண்டு நியூஸ்பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டும். குறித்த நாட்களுக்கு பிறகு பத்திரம் கிடைக்கவில்லையெனில் காவல்துறையிலிருந்து பத்திரம் கிடைக்கவில்லை என கடிதம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் நோட்டரி பப்ளிக் ஒருவரிடமும் உறுதிமொழி பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவல்களோடு காணாமல் போன பத்திரத்தின் சர்வே எண் மற்றும் விவரங் களோடு சார்பதிவாளரை அணுகி புதிய பத்திரத்திற்கு விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். காணாமல் போன பத்திரம் கிடைத்தால், எது செல்லுபடியாகும் என எழுத்துபூர்வமாக உறுதி செய்துகொள்ள வேண்டும்.