கிழிந்த நோட்டுக்களை வங்கியில் மாற்றலாம்..!
நம்மில் பலர் கிழிந்த நோட்டு இனி பயன்படாது என வீட்டிலேயே போட்டுவிடுவோம். 10 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை அனைத்து நோட்டுகளையும் வங்கிகளிலேயே மாற்றிக் கொள்ளலாம்.
வங்கிகளில் கிழிந்த நோட்டுக்களை ஏற்க மாட்டார்களே என்று கூறலாம். ஆனால் ரிசர்வ் வங்கி, கிழிந்த நோட்டுகளை வங்கிகள் கட்டாயம் மாற்றித் தரவேண்டும். அதுதான் விதிமுறை. அவ்வாறு வங்கிகள் கிழிந்த நோட்டுகளை வாங்க மறுத்தால் அதுகுறித்து புகார் அளிக்கலாம். ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து அந்த வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதேபோல, கிழிந்த நோட்டுகளுக்கு திரும்பத் தரப்படும் பணத்துக்கும் சில விதிமுறைகள் உள்ளன. நோட்டுகள் சிறிய அளவில் கிழிந்திருந்தால் அதே மதிப்புக்கு வேறு நோட்டுகள் மாற்றித் தரப்படும். ஆனால், முழுவதுமாகக் கிழிந்திருந்தால் அதில் குறிப்பிட்ட ஒரு மதிப்புக்கு மட்டுமே மாற்றித் தரப்படும்.
அதேவேளையில் ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நோட்டுகள் எந்த அளவுக்குக் கிழிந்து இருந்தாலும் அவற்றின் முழு மதிப்புக்கும் வேறு நோட்டுகள் மாற்றித் தரப்படும். நோட்டுகள் துண்டு துண்டாகக் கிழிந்துபோனாலோ அல்லது எரிந்துபோயிருந்தாலோ அதை வங்கிகளில் மாற்ற முடியாது. ரிசர்வ் வங்கி அலுவலகத்தில்தான் மாற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி விதிமுறை கூறுகிறது.