திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் காலியாக உள்ள 143 செவிலியர்கள் (Staff Nurses) பணியிடம் ரூ.18,000/-மாத ஊதியத்திலும், 11 ஆய்வக நுட்புநர் (Lab Technician Gr-111) பணியிடம் ரூ.13.000/- மாத ஊதியத்திலும், 5 மருந்தாளுநர் (Pharmacist) பணியிடம் ரூ.15,000/-மாத ஊதியத்திலும், 7 செவிலியர் (Mid level health care provider) (MLHP) பணியிடம் ரூ.18,000/-மாத ஊதியத்திலும், 4 மருத்துவமனை பணியாளர் (Hospital worker/Support staff) பணியிடம் ரூ.8,500/-மாத ஊதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
மேற்காணும் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி-20, அலுவலகத்தில் வருகின்ற 21.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.