ஸ்டீவ் ஜிம் சார்பில் திருச்சி மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி
ஸ்டீவ் ஜிம் சார்பில் திருச்சி மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி
திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கம் மற்றும் ஸ்டீவ் ஜிம் சார்பில் திருச்சி மாவட்ட அளவிலான ஆண்கள் பெண்களுக்கான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.
சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர்ஸ் என பல பிரிவினருக்கு OPEN பெஞ்ச் பிரஸ், டெட்லிப்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உடற்பயிற்சி கூடத்தினர், விளையாட்டு ஆர்வலர்கள் என ஆண்கள் 300 பேர், பெண்கள் 43 பேர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தேசிய அளவிலான நடுவர்கள் சதீஷ்குமார், சிவகுமார் உள்ளிட்ட குழுவினர் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றது. போட்டியின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது . போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்களாக திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் விசுராஜன், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் இருந்தனர். முன்னதாக மகேந்திரன், அரிமா அறிவழகன், தொழிலதிபர் சாத்தனூர் சிவா உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். விழா முடிவில் ஸ்டீவ் ஜிம் ஸ்டீபன் நன்றி கூறினார்.