திருச்சியில் அதிநவீன தொழில் நுட்பத்தில் குரு டிஜிட்டல் ஸ்டுடியோ
புகைப்படம் அனைத்து தரப்பினருக்கும் அன்றாட, அவசியத்தேவைகளுக்கு மிகவும் பயன்படுவது. புகைப்படக்கலை என்பது அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு கலையாகும். அடிப்படை அடையாளத்திற்கான புகைப்படம் முதல் ஆயுள் முழுமைக்கும் நினைவில் நிற்கவைக்கும் நிகழ்ச்சிகள் வரை அனைவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்று. புகைப்படக்காரர்களின் கலாரசனையே அவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த உதவும்.
பல தலைமுறைகளாக ஒரே நிறுவனத் தில் புகைப்படம் எடுப்பவர்களை தன் வசம் ஈர்ப்பது என்பது தனிக்கலையாகும். பத்திரிகை புகைப்படக்காரராக இருந்து பின் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் தனக்கென தனிஅடையாளத்துடன் புகைப்பட நிறுவனம் தொடங்கிய குரு டிஜிட்டல் ஸ்டுடியோ உரிமையாளர் பொன்குமார் தனது பத்திரிகை துறை அனுபவம் மூலம் கிடைத்த தொடர்புகள், கல்வி நிறுவனங்களுக்கான பணிகள் என தனது தொழில் வளர்ச்சியை மேம் படுத்தினார்.
தொழில் நேர்த்தி, உயரிய தரம், குறித்த நேரத்தில் டெலிவரி, வாடிக்கையாளர்களிடம் இன்முகத்துடன் பேசும் குணம், ஓய்வறியா கடுமையான உழைப்பின் மூலம் தனது வாடிக்கையாளர்கள் வட்டத்தை பன்மடங்கு பெருக்கினார். திருச்சி காந்தி மார்க்கெட் மணிமண்டபம் சாலையில் அமைந்துள்ள குரு டிஜிட்டல் ஸ்டுடியோ உரிமையாளர் பொன்குமார் கூறும்போது புகைப்படத்துறையில் அறிமுகப்படுத்தபடும் நவீன சாதனங்கள் மூலம் புதிய மேம்படுத்த பட்ட தொழில்நுட்ப வசதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் திருப்திபடும் வகையில் சேவைகள் செய்து வருகிறோம்.
WEDDING PHOTOGRAPHY-ல் சிறந்த பயிற்சி பெற்ற புகைப்படக்காரர் மற்றும் ஒளிப்பதிவாளர் மூலம் நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப சிந்தடிக் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆல்பங்கள் தயாரித்து கொடுத்து முழு மனநிறைவுடன் அவர்களை செல்ல வைக்கிறோம்.
வீடியோ எடிட்டிங், கிரியேட்டிவ் வேலைகள்,லேமினேசன் மட்டுமல்லாமல் ID CARD எனப்படும் அடையாள அட்டை தயாரிப்பில் தனிச்சிறப்புடன் திகழ்கிறோம். பள்ளிகள்,தனியார் வர்த்தக நிறுவன ஊழியர்களுக்கு, முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் தற்காலிக அடையாள அட்டை என பல்வேறு வகையான அட்டைகள் தயாரித்து தருகிறோம். கழுத்தில் மாட்டும் பட்டையில் (TAG) நிறுவனங்களின் பெயருடன் பல்வேறு வண்ணங்களிலும் (Multi colour) தயாரித்து தருகிறோம்.மேலும் நிறுவனங்களுக்கு தேவையான BUSINESS CARD பார்கோடுகளுடன் மற்றும் ஹேலோகிராம்
(Halogram) தேவைப்படுவோருக்கு அதையும் இணைத்து தருகிறோம் என்றார்.
தொடர்புக்கு : 0431-4010271, 93454 -06455