ரொம்ப ஈசி, நிறைய லாபம் தினமும் ரூ.4 ஆயிரம் சம்பாதிக்கலாம்
இது யாரும் செய்யாத தொழில்.ரொம்ப ஈசி, நிறைந்த லாபம் தரும். தினமும் ரூ.4 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இந்த தொழிலை இதுவரை யாரும் செய்யவில்லை. முயற்சித்து பாருங்களேன். அந்த தொழில் வேறு ஒன்றும் இல்லை. தேங்காயில் இருந்து பால் எடுத்து விற்பனை செய்யும் தொழில். இது ஒரு புதிய தொழிலாக இருக்கும்..
தேங்காய் பால் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு பானமாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் உணவு சார்ந்த எந்த ஒரு தொழிலை செய்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். ஆக தயக்கம் இல்லாமல் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.வீட்டில் அல்லது ஒரு தள்ளுவண்டி கடை அமைத்து கூட இந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.
தள்ளுவண்டி கடை என்பதால் மக்கள் கூட்டம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த தள்ளு வண்டியை எடுத்து சென்று நன்றாக விற்பனை செய்ய முடியும்.தினமும் 3000 வரை வருமானம் தரும் தொழில்.. ஆண், பெண் இருவருமே வீட்டில் தயார் செய்து விற்பனை செய்யலாம்..!
தேங்காய் தான் இந்த தொழிலுக்கான மூலப்பொருள் ஆகும். அதன்பிறகு கிளாஸ், நாற்காலி, டேபிள், மிக்சி, பாத்திரங்கள் என்று இது போன்ற பொருட்கள் தேவைப்படும்.குறைந்தபட்சம் நீங்கள் 1000 முதலீடு செய்தாலே போதும் இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம்.
தேங்காய் பால் எடுப்பதற்கு இயந்திரங்களுக்கு இருக்கிறது, இருப்பினும் அதன் ஆரம்ப விலையே 50000 ஆகும், அதேபோல் தேங்காய் துருவுவதற்கும் இயந்திரம் இருக்கும் அதன் விலை 5000 ரூபாய் ஆகும்.. நீங்கள் விரும்பினால் இந்த இயந்திரத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது தொழில் நன்கு வளர்ச்சி அடைந்தபிறகு கூட இந்த இயந்திரத்தை வாங்கி பயன்படுத்தலாம்.
ஒரு நாளுக்கு 20 லிட்டர் தேங்காய் பால் தயார் செய்து விற்பனை செய்தீர்கள் என்றாலே 4000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.அதாவது ஒரு கிளாஸ் தேங்காய் பாலின் விலை 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டோம் என்றால், ஒரு நாளுக்கு 200 கிளாஸ் தேங்காய் பால் விற்பனை ஆகிவிட்டது என்றாலே நமக்கு 4000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை, பிரபலமான கோயில்கள், பூங்கா இது போன்ற இடங்களில் சென்ற் விற்பனை செய்யலாம்.