கடன் வேணுமா… வாங்க… கலெக்டர் சிவராசு அழைப்பு
திருச்சி மாவட்டத்தில், நடப்பாண்டில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்கோ செட்) மூலமாக பிசி, எம்பிசி மற்றும் சீர்மரபின மக்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் 6 முதல் 8 சதவீத வட்டியில் ரூ15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கான பொற்கால திட்டத்தில் ரூ.2 லட்சம் வரையிலும், பெண்களுக்கான நுண்கடன் திட்டத்தில் 4% வட்டியில் வழங்கப் படுகிறது. ஆண்களுக்கான நுண்கடன் திட்டத்தில் 5% வட்டியில் நபருக்கு ரூ.1 லட்சமும், குழுவுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படும்.
சிறுகுறு விவசாயிகள் நீர்பாசன வதி ஏற்படுத்த அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மானியத்துடன் ரூ1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது-.