எது சரியான முதலீடு..! தங்கமா..? வீட்டுமனையா..?
இந்திய மக்களில் தமிழர்கள் பெருமளவு கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லலாம். இலவச அரிசி, 100 யூனிட் வரை இலவச மின்சாரம், ரேஷனில் குறைந்த விலையில் சர்க்கரை, பருப்பு, எண்ணெய் என எல்லாமும் கிடைத்து விடுகிறது. வருவாய் இன்றி முடங்கிய கொரோனா காலத்தில் அரசும், தன்னார்வலர்களும் வீடு தேடி வந்து உண்பதற்கு உதவி செய்தனர். உடுத்த உடை, உண்ண உணவிற்கு பிரச்சனையில்லாமல் போனது. ஆனால் வீட்டு வாடகை..?
தனியாரிடமோ, வங்கிகளிளோ வாங்கிய கடனுக்கான தவணை, வட்டியை கேட்டு டார்ச்சர் இல்லை. மூன்று மாதம் சென்று தள்ளிக் கட்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வீட்டுவாடகை அப்படியில்லை. வாடகை தேதி தள்ளிப் போனாலும் நாம் தான் சேர்த்து வைத்து கட்ட வேண்டும் என்ற இக்கட்டிற்கு ஆளாக நேர்ந்தது. கொரோனா காலத்திலும் நம் வீடு தேடி பணம் கேட்டு வந்தவர்கள் வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே.!
கொரோனா காலமானது அனைத்து தொழிலையும் வெகுவாக பாதிக்க வைத்ததோடு வீடுகளில் முடங்கிய சாமானிய மக்களை பெருமளவு சிந்திக்கவும் வைத்தது. அது, “சொந்த வீடு கட்டாயம் வேண்டும்“ என்பது தான் அந்த சிந்தனை. கொரோனா காலத்திற்கு பின்பு ஹவுசிங்.காம் செய்த ஆய்வொன்றில், ரியல் எஸ்டேட் துறை தான் முதலீட்டுக்குச் சிறந்த இடம் என 35 சதவீதத்தினரும், 28 சதவீதத்தினர் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளனர். அதற்கேற்றாற் போல் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது மேலும் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்காலத்தை சிந்திக்கும் சாமானிய மக்களுக்கு, மனை, வீடு மட்டுமே பாதுகாப்பு தரக்கூடிய சரியான முதலீடாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களின் அடிப்படையில் தங்கத்தில் செய்யும் முதலீடு என்பது நிச்சயமற்றதாக மாறி வருகிறது. ஆனால் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்பு வசதிகளும் பெருகும் என்ற நோக்கில், மனைகளின் விலை உயரும் என்பதை ஒப்பிட்டு அறியலாம். வீட்டு மனைகளில் செய்யப்படும் முதலீடே சிறந்த முதலீடாக இருக்கும் என்பதற்கும் சில உதாரணங்களை நாம் இங்கே பார்ப்போம்.
திருச்சி, திருவெறும்பூரில் கடந்த 1964ம் ஆண்டு பெல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அச்சமயத்தில் தொழிற்சாலையை சுற்றியுள்ள இடங்களின் மதிப்பு சொற்பமே. 1970ல் அன்றைய பெல்பூர் பகுதியில் உள்ள மனையின் சதுரஅடி வெறும் ஐம்பது பைசா மட்டுமே. படிப்படியாக உயர்ந்த இதன் இன்றைய மதிப்பு ரூ.3,000த்தை தாண்டியுள்ளது. சதுர அடி 30 ரூபாயாக இருந்த கைலாஷ் நகரில் உள்ள மனையின் இன்றைய மதிப்பு சதுர அடி ரூ.2,000த்தை தாண்டிச் சென்றுவிட்டது. இப்படித்தான் பெல் தொழிற்சாலையை சுற்றியுள்ள ஜெய்நகர், எழில் நகர், பெல் நகர் என் அருகாமை இடங்களில் உள்ள மனைகளின் மதிப்பு பன்மடங்கு பெருகியுள்ளது.
கரூர், புகளுரில் உள்ள TNPL நிறுவனத்தின் முதல் யூனிட் 1984ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அச்சமயத்தில் நிறுவனத்தின் நான்குபுறமும் சுற்றியிருந்த வேலாயுதம்பாளையம், வேலூர், மண்மங்கலம், மூளிமங்கலம், சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள நிலங்களின் மதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. TNPL வளர்ச்சியடைந்த பிறகு சுற்றியுள்ள இடங்களின் மதிப்பு பன்மடங்கு பெருகியது. 1983ல் வெறும் 20 பைசாவாக இருந்த முல்லைநகரின் மதிப்பு இன்று சதுர அடி ரூ.3,000த்தை தாண்டிச் செல்கிறது. 1990ல் சதுரஅடி 15 ரூபாயாக இருந்த சிவராமன் நகரில் உள்ள மனையின் மதிப்பு இன்று ரூ.2,000த்தை தாண்டி செல்கிறது. சரி.. இனி நாம் எதிர்காலத் தேவைக்கான முதலீடுகளை செய்வதற்கான தகுந்த இடம் எது என பார்ப்போம்.
அதே திருச்சி மாவட்டத்தில், கரூருக்கு மிக அருகில் 875 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,650 முதலீட்டில்TNPL நிறுவனத்தின் இரண்டாவது யூனிட் தொடங்கப்பட்டது. இந்தியாவில் நம்பர் ஒன் காகித அட்டை தொழிற்சாலையான TNPL நிறுவனத்தைச் சுற்றி புதிய தொழில் நகரம் உருவாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மனைகளின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.
இதன் பிரதான நுழைவாயிலிற்கு அருகாமையில் உள்ள வீட்டு மனைகளின் மதிப்பு தற்போது ரூ.260 முதல் ரூ.300 அளவிற்கே விற்கப்படுகிறது. ஞிஜிசிறி அப்ரூவல் பெற்ற இந்த மனைப்பிரிவில் நாம் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் எந்த அளவிற்கு ஏற்றம் பெறும் என்பதை மேற்கூறிய உதாரணங்கள் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
TNPL நிறுவனத்தின் பிரதான நுழைவு வாயிலில் இருந்து வெறும் 10 அடி தூரத்தில் தான் இந்த மனைப்பிரிவு அமைந்துள்ளது. இதனால் மனையை சுற்றியுள்ள இடங்களின் மதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இடமாக இருக்கும் என்பதால் மனைகளில் செய்யப்படும் முதலீடு அவசரத்திற்கு உதவாது என்று நினைப்பவர்கள் எண்ணத்தை மாற்றும் அளவிற்கு உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
4000 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் அருகாமையில் குடியிருக்க, வீடு வாங்கத் தொடங்கும் வேளையில் இதன் மதிப்பு உயரும் என்பதில் என்ன சந்தேகம் இருந்துவிடப் போகிறது. மேலும் இப்பகுதியில் மனை வாங்கி வீடு கட்டினால் வாடகை வருவாய் சராசரியாக ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.
TNPL நிறுவனத்தின் முதல் யூனிட் தொடங்கப்பட்ட போது மனையின் மதிப்பு பன்மடங்கு பெருகியது போல் இரண்டாவது யூனிட்டை சுற்றியுள்ள இடங்களின் மதிப்பும் உயரும் என்பது தானே சரியாக இருக்கும். உங்களுக்கு அப்பகுதியில் உள்ள மனைகளில் முதலீடு செய்து வருவாயினை பன்மடங்கு பெருகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம், விருப்பம் இருந்தால் 80987 11195, 93451 15137 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.