கிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
மாட்டு வரட்டி
மாட்டு சாணம் கிராமத்தில் எளிதில் தென்படும் ஒரு பொருள். மேலும் மாட்டு சாணத்தை மொத்தமாக பேசியும் கிராமத்தில் யாரிடமிருந்தும் வாங்கி வரலாம். இதில் வறட்டியை செய்து விற்கலாம். அட என்னடா இது.
இதை யார் வாங்குவார்கள் என்றுதானே நினைகிறீர்கள். “buy cow dung” என்று கூகிளில் அடித்து பாருங்கள். பளபள வென்று பாக்கெட்டுகளில் வறட்டிகள் அடுக்கப்பட்ட படத்துடன் இணையதள விற்பனை காணக்கிடைக்கும், இதை ஏன் நீங்கள் செய்ய கூடாது. இதற்கான மூலப்பொருளும் எளிதாகவே கிடைக்கும். உழைத்தால் மட்டும் போதும். வேறெந்த முதலீடும் இல்லை. லாபம் மட்டுமே.
முருங்கை இலை பௌடர்
முருங்கை மரங்களை கண்டிருப்பீர்கள். கிராமங்களில் அவற்றின் இலைகளை அல்லது இலை பொடிகளை யாரும் கடைகளில் சென்று வாங்க மாட்டார்கள். ஏனென்றால் அவைகள் எளிதாக கிடப்பதால். ஆனால் நகரங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ நிலைமையே வேறு. இவைகள் எளிதில் கிடைக்காது. இங்குதான் உங்களின் அறிவை பயன்படுத்த வேண்டும். முருங்கை இலையில் மதிப்பு கூட்டு செய்தால் நல்ல லாபத்திற்கு விற்கலாம்.
அதாவது முருங்கை இலையை அலசி காயவைத்து பொடியாக்கி பொட்டலம் போட்டு விற்கலாம். அதற்கென்ற ஒரு சிறு விலையை நிர்ணயம் செய்து விற்கலாம். இதற்கான மூலப்பொருளுக்கு நீங்கள் பெரிதாக எந்த வித செலவும் செய்ய தேவையில்லை. நன்றாக விற்றால் லாபம் மட்டுமே. இது முருங்கை இலைக்கு மட்டும் உரியதல்ல. மேலும் உங்களுக்கு கிடைக்கும் மூலிகை சார்ந்த, உண்பதற்கு தகுந்த இலைகளை பொடி செய்து விற்கலாம்.
தேங்காய் சிரட்டை
தென்னை மரங்கள் அதிகம் உள்ள ஊர்களில், தேங்காய் சிரட்டைகள் எளிதில் கிடைக்கலாம். தேங்காய் சிரட்டைகளை நேரடியாக யாரும் வாங்க மாட்டார்கள். ஆனால் அதில் உங்களின் கை வண்ணங்களை காண்பித்து ஒரு புதிய உபகரணமாக மாற்றுவதன் மூலம், உள்ளூரிலேயே விற்கலாம். முழுக்கு முழுக்க உங்களின் கற்பனையை தூண்டும் வேலையாகும் இது. அதுவும் பெண்களுக்கு உகந்த வேலையாகும்.
பெண்கள் சுய முன்னேற்ற குழுக்களுக்கு இது போன்றதொரு கலையை கற்றுகொடுத்தாலே போதும், அவர்களுக்கு இது பெரும் லாபத்தை கொடுக்கும். “coconut shell products” என்று கூகிள் பண்ணி பாருங்கள். நீங்களே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டீர்கள். தேங்காய் சிரட்டைகளில் எத்துனை எத்துனை பொருட்கள் இருக்கின்றன. தேங்காய் சிரட்டையில் வளையல்கள், குடுவைகள், கரண்டிகள், சிறு பாத்திரம் இன்னும் ஏராளம்.
வேப்பங்குச்சி
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பது போல் வேப்பங்குச்சியால் பல் துலக்கினால், பற்கள் கற்கள் போல் வலுவாகும். கடினமான அந்த குச்சியை கடித்து, பிழிந்து, மென்று பல் விளக்குவதால் பற்களுக்கு நல்ல பயிற்சியாகி நாளடைவில் வலுவடையும் ஆனால் தற்காலத்தில் அப்படியொரு வலுவான பயிற்சியை யாரும் செய்வதில்லை. மிருதுவாக இருக்கும் பற்பசை மற்றும் தூரிக கொண்டு லேசாக தேய்த்து விடுவதால் பற்கள் தூய்மை அடைய மட்டும் செய்கிறதே தவிர, வலுவடைவதில்லை.
இந்த வேப்பங்குச்சியை விரும்புவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. எளிதாக கிடைக்குமிடத்தில் உள்ள மக்களுக்கு இதன் அருமை தெரிவதில்லை. அதனால் சற்று பருத்த வேப்பங்குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக சரி சமமாக வெட்டி அதனை பாக்கெட் செய்து விற்றால், நல்லதொரு லாபத்தை அடையலாம். கூடவே அதன் மருத்துவ குணத்தை பாக்கெட் மீது ஒரு காகிதத்தில் எழுதியும் விற்பனை செய்யலாம். அதனால் வாங்குவோருக்கு நல்ல விழிப்புணர்வாகவும் அமையும்