வங்கிக்கு போகாமலே 35 லட்சம் வரை கடன் வாங்கலாம்… எஸ்.பி.ஐ-யின் புதிய திட்டம்:
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தொந்தரவு இல்லாத மற்றும் காகிதமில்லா கடன் பெறும் வகையில் (எஸ்பிஐ) யோனோ தளத்தில் ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. தகுதியான சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் எளிதாக கடன் வழங்கப்படுகிறது.
இந்த ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்டின் கீழ், எஸ்பிஐயின் மத்திய மாநில அரசு சம்பளம் பெறும் வாடிக்கையாளர்கள் தனிநபர் கடனைப் பெற கிளைக்குச் செல்ல வேண்டியதில்லை. கடன் காசோலைகள், தகுதி, ஆவணங்கள் டிஜிட்டல் முறையிலே செய்யப்படும் என்றும் எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.
இந்த ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்டின் கீழ், வாடிக்கையாளர் வங்கி செல்லாமலே ரூ.35 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெற முடியும்