Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உன் வீடு…. என் உரிமை… வாடகைக்கு குடியிருப்புவாசிகளுக்கு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

உன் வீடு…. என் உரிமை… வாடகைக்கு குடியிருப்புவாசிகளுக்கு

சட்டப்படியான உரிமைகள்தமிழ்நாடு அரசின் சட்டப்படி (Tamilnadu Regulations Of Rights And Responsibility Of LandLords And Tenants Act (2017) வாடகை வீட்டில் குடியிருப்பவர் கொடுக்கும் வாடகைப் பணத்துக்கு வீட்டின் உரிமையாளர் கண்டிப்பாக ரசீது தர வேண்டும். அப்படி ரசீது தராவிட்டால் குடியிருப்பவர் ஆன்லைன் மூலமாக வாடகைப் பணத்தைக் கொடுக்கலாம்.  வீட்டின் உரிமையாளர் வாடகை ரசீது தரவில்லை எனில், வாடகை அதிகாரியிடம் சென்று குடியிருப்பவர் புகார் செய்யலாம்.

வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு குடியிருப்பவரின் வீட்டுக்குள் ஏதாவது ஒரு காரணத்துக்காகச் செல்ல வேண்டுமென்றால், 24 மணி நேரத்துக்கு முன்பாகக் குடியிருப்பவருக்கு ஒரு நோட்டீஸ் தர வேண்டும். அதேபோல, காலை 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்குப் பின்னர், வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருப்பவரின் வீட்டுக்குள் செல்லக் கூடாது.

வாடகை ஒப்பந்தம் போட்டு தற்போது அந்த ஒப்பந்தம் முடியப்போகிறது எனில், மூன்று மாதங்களுக்கு முன்னரே வீட்டின் உரிமையாளரும், வாடகைக்கு இருப்பவரும் ஒன்றாக அமர்ந்து பேசி அடுத்ததாக ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். ஆனால், ஒப்பந்தம் முடிந்தும் அடுத்ததாக எந்தவொரு ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை எனில், வாடகைக்கு குடியிருப்பவர் தொடர்ந்து ஆறு மாதம் அந்த வீட்டில் குடி இருக்கலாம். ஆனால், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று சொன்னால் குடியிருப்பவர் கட்டாயம் காலி செய்தே ஆக வேண்டும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

அதே போல, வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துபோகும் சமயத்தில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஒப்பந்தம் முடியும் வரை அந்த வீட்டில் தங்கிக்கொள்ளலாம். ஒப்பந்தம் முடிந்த பிறகுதான் ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்ற முடியும். அப்படி ஒப்பந்தம் முடிந்த பிறகும் குடியிருப்பவர் வீட்டைவிட்டு வெளியேறவில்லை எனில், வாடகை நீதிமன்றத்தில் சென்று புகார் செய்யலாம்.

நீதிமன்றம் சொல்லியும் குடியிருப்பவர் வீட்டை காலி செய்து வெளியேறவில்லை எனில், ஒப்பந்தம் முடிந்த தேதியிலிருந்து வீட்டைக் காலி செய்து வெளியேறும் தேதி வரைக்கும் இரண்டு மடங்கு வாடகையை வீட்டின் உரிமையாளர் அவரிடமிருந்து வசூலித்துக்கொள்ளலாம்.

இந்த வாடகைச் சட்டங்கள் எந்த இடத்தில் எல்லாம் பொருந்தாது எனில், அரசு நிலங்கள், கோவில் இடங்கள், நிறுவனத்தின் ஊழியருக்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் மற்றும் ஹோட்டல், லாட்ஜ்க்கு இந்தச் சட்டம் பொருந்தாது. இதுதான் வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்கு குடியிருப்பவருக்கும் உள்ள சட்டப்படி உள்ள உரிமைகள் ஆகும்.

ஆனால், இந்த எல்லா உரிமைகளும் கிடைக்க வேண்டுமெனில், வாடகை ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு, அதை அரசு அலுவலகத்தில் ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். எனவே, வாடகைக்கு குடியிருப்பவர்களும், வீட்டின் உரிமையாளரும் இந்த விஷயங்களைக் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமானதாகும்!

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.