திறன் வளர்த்தல் பயிற்சி மையம்..!
தொழில் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கிட இந்திய அரசின் திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சகம், டாட்டா-இந்திய திறன் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக மும்பையில், முதல் பிரிவுப் பயிற்சி வகுப்பினை மத்தியத் திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் டாக்டர். மகேந்திரநாத் பாண்டே காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
தொழிற்சாலை தானியங்கிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் (திறன்மிகு) உற்பத்தி ஆகியவற்றில் இரண்டு குறுகிய காலப் பயிற்சிகளை முதல் பிரிவு கொண்டிருக்கும்.