பொம்மை தயாரிப்பில் ரூ.10 ஆயிரம் தான் முதலீடு,
மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம்
வீட்டின் ஒரு சிறிய அறை இருந்தால் போதுமானது. சார்ட் பேப்பர், வெல்வெட் துணி, துணிகளை வெட்ட ஒரு டேபிள் (ரூ.4,000-), மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்த பொருட்களை வைக்க அலமாரி (ரூ..5,000-), பெரிய கத்தரி 1, சிறிய கத்தரி 2 (ரூ.400), பிளாஸ்டிக் டிரே 2 (ரூ.100) , செலோ டேப் ஸ்டாண்ட் (ரூ.150). மொத்தம் ரூ.9,650- கிட்டத்தட்ட இந்த குடிசை தொழிலை துவங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- தேவைப்படும்.
சிறிய பொம்மை செய்ய ரூ.20ம், பெரிய பொம்மை செய்ய ரூ.40 வரை செலவாகும். ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) சிறிய பொம்மைகள் 40, பெரியவை 20 தயாரிக்கலாம்.
ஒருநாள் உற்பத்தி செலவு ரூ.800- மாதம் 25 நாளில் 1000 சிறிய பொம்மை அல்லது 500 பெரிய பொம்மை வித விதமாக மற்றும் புதுமையாகவும், கலைநயத்துடனும் தயார் செய்ய உற்பத்தி செலவு ரூ.20,000/- தேவைப்படும்.
சிறிய பொம்மைகளை ரூ.100-க்கும், பெரிய பொம்மைகளை ரூ.150-க்கும் விற்பனை செய்யலாம். இதன் மூலம் மாதம் 40,000/–& ரூபாய் வரை சம்பாதிக்கலம்.மாத வருமானம் ரூ.40,000-யில் உற்பத்தி செலவு போக 10,000/-& போக லாபமாக ரூ.30,000/-& கிடைக்கும்.