பங்குகளில் வர்த்தகம் செய்ய போகிறீர்களா..?
பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் உள்ளவர் நீங்கள் என்றால் முதலில் கீழே உள்ள விஷயங்களை படியுங்கள்..
- புரோக்கர் இன்றி நேரடியாக நீங்கள் பங்கு வரத்தகத்தில் ஈடுபட விரும்பினால் உங்களுக்கு ஆங்கிலம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
- நடப்பு அல்லது சேமிப்பு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
- டீமேட் பங்கு கணக்கு தொடங்க வேண்டும். மேலும் பங்கு வர்த்தக நிறுவனம் (அ) பங்கு புரோக்கர் மூலம் வர்த்தக கணக்கு தொடங்கி அடையாள எண் பெறலாம்.
அதென்ன டீமேட் அக்கவுண்ட்..?
பங்குகளை பத்திரப்படுத்தவும், பங்குகளை வாங்கி, விற்பனை செய்ய உதவும் பங்கு வர்த்தக கணக்கே டீமேட் அக்கவுண்ட் என அழைக்கப்படுகிறது. இதற்கு பாஸ்புக் தரப்படுவதில்லை. பங்குகளை விற்பனை செய்கையில் பரிவர்த்தனை சிலிப் தரப்படுகிறது. டீமேட் கணக்கை தொடங்குகையில், சங்கேத எண், அடையாள எண் தரப்படும். அதை பயன்படுத்தியே கம்பெனி பங்குகள் குறித்த விவரங்கள் தரப்படும்.
- குறைந்தபட்ச முதலீடு, அதாவது உபரி பணத்தை அவசர தேவையில்லாத போது பங்குகளில் முதலீடு செய்யலாம்.
- தனிப்பட்ட நபரோ, கூட்டாகவோ இதை செய்யலாம். தினசரி வாங்கி அன்றே விற்றால் அதிக முதலீடு அவசியம் தேவையில்லை.
- தினசரி பங்குசந்தை நிலவரங்களை கவனிக்கும் ஆர்வம் அவசியம்.
- நேரடியாக கணினி மூலம் பங்குகளை பெற விரும்புபவர்கள் கணினி, இணையம் மூலம் ஆன்லைன் பங்குசந்தை கணக்கு ஆரம்பித்து பங்குகள் டிரேடிங் செய்யலாம். பல வங்கிகள் இந்த சேவையை செய்கிறது. ஒவ்வொரு முறையும் பங்குகள் விற்பனை செய்யப்படும் போது வங்கிகள் சர்வீஸ் சார்ஜ் பெற்றுக்கொள்ளும்.
- வருமான வரிக்கணக்கு எண் அவசியம் தேவை.
- அடையாள அட்டை முகவரியுடன் கூடிய சான்றிதழ்