வங்கி திவால்… பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
வங்கி மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்வு நடத்திய அமெரிக்காவின் 3 பொருளாதார நிபுணர்களுக்கு 2022ம் ஆண் டிற்கான பொருளா தாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசு வங்கி மற்றும் நிதிநெருக்கடி தொடர்பான ஆய்விற்காக அமெரிக்காவின் டக்ளஸ் டைமண்ட், பிலிப் எச். டிவிக் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் நிதி நெருக்கடிகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை மேம்படுத்தியது என நோபல் பரிசுக் கமிட்டி தெரிவித்துள்ளது.
மேலும், பொருளாதா ரத்தில் வங்கிகள் எவ்வளவு முக்கிய மானவை குறிப்பாக நிதியியல் நெருக்கடியில் சிக்கியுள்ள போது வங்கிகளின் முக்கியத்துவம் குறித்தும், வங்கிகள் ஏன் திவாலாகக் கூடாது என்பதையும் உணர்த்துவாக ஆய்வு முடிவுகள் இருப்பதாகவும் பாராட்டப்பட்டுள்ளது.