நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்ற குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள்
வீ ட்டுக் கடன் வழங்குவதில் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.குறைந்த வட்டி விகிதத்தினை மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது தனியார் வங்கியான கோடக் மகேந்திரா வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி.யும் குறைந்த வட்டி என்ற இடத்தில் நிற்கின்றன.
கோடக் மகேந்திரா வங்கியில் 75 லட்சம் ரூபாய் கடனுக்கு, 20 வருட காலத்திற்கு மாத இஎம்ஐ விகிதம் கணக்கிட்டால் ரூ.56,582 ஆகும். வீட்டுக் கடன்வட்டி விகிதம் வருடத்திற்கு 6.65% ஆகும்.
வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள்
நிறுவனங்களில் வேலை செய்யும் சம்பளதாரர்களுக்கு கடைசி 3 மாத சம்பள சிலிப், 6 மாத வங்கி பரிவர்த்தனை, வரிகணக்கு தாக்கல் செய்த விவரங்கள், பான்கார்டு, ஆதார் கார்டு,பணி நியமன கடிதம் ஆகியவைகளை வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.சுயதொழில் செய்வோர், கடந்த 3 ஆண்டு வரி கணக்கு தாக்கல் அறிக்கை, ஓராண்டு வங்கி பரிவர்த்தனை விபரம் மற்றும் பான்கார்டு, ஆதார்கார்டு ஆகியவை வழங்க வேண்டும்.இரு பிரிவினருக்குமான விற்பனைக்கான ஒப்பந்தம், கட்டுமான ஒப்பந்தம், தாய் பத்திரம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், குறைந்தபட்சம் 30 வருட வில்லங்க சான்று, அங்கீகரிக்கப்பட்ட பிளான், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, லீகல் ஒப்பீனியன் ஆகியவற்றை வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கியில் வருடத்திற்கு வட்டிவிகிதம் 6.70% ஆகும். இவ்வங்கியில் மாத இஎம்ஐ ரூ.56,805 ஆகும்.
ஹெச்டிஎஃப்சி லிமிடெட்டில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.70% ஆகும். இதிலும்75 லட்சம் ரூபாய்க்கு, மாத இஎம்ஐ ரூ.56,805 ரூபாயாகும்.
பேங்க் ஆப் பரோடாவில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.75% ஆகும். இதிலும் 75 லட்சம் ரூபாய்க்கு, மாத இஎம்ஐ ரூ.57,027 ரூபாயாகும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி & டாடா கேப்பிட்டல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு 6.80% ஆகும். இவ்வங்கியில் மாத தவணை தொகை ரூ.57,250 ஆகும்.
டாடா கேப்பிட்டலில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.80% ஆகும். இவ்வங்கியில் மாத தவணை தொகை ரூ.57,250 ஆகும்.
இதே பஜாஜ் பின்செர்விலும் வட்டி விகிதம் 6.80% ஆகும். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவிலும், பஞ்சாப் சிந்த் வங்கியிலும் வருடத்திற்குவட்டி விகிதம் 6.85% ஆகும். இவ்வங்கிகளில் மாத தவணை தொகை ரூ.57,474 ஆகும்.
கனராவங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க்ஆப் மஹராஷ்டிரா, எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் உள்ளிட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.90% ஆகும். இதன் படி மாத தவணை தொகையானது ரூ.57,698 ரூபாயாகும்.
எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் இந்தியா, கன் பின் ஹோம்ஸில் வட்டி விகிதம் வருடத்திற்கு 6.95% ஆகும். மாத தவணை தொகை ரூ.57,923 ரூபாயாகும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகுந்த சரிவினைக் கண்டுள்ள நிலையில், சொந்த வீடு கனவை நனவாக்க இது தான் சரியான நேரம் என்றே கூறலாம்.