கேஷ்பேக் ஆஃபர் வழங்கும் பேடிஎம்!
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வர்த்தகத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு கால்பதித்த பே.டி.எம் நிறுவனம் தற்போது 7வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சுமார் 2 கோடிக்கும் மேலான வணிகர்கள் பே.டி.எம் பணப்பரிவர்த்தனை பயன்படுத்துவதாக கூறும் அந்நிறுவனம் அத்தகைய வணிகர்களை மகிழ்விப்பதற்காக, தகுதி வாய்ந்த வணிகர்களுக்கு 50 விழுக்காடு கேஷ்பேக் சலுகை வழங்க இருப்பதாக கூறியுள்ளது.
இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 200 மாவட்டங்களில் இந்த கேஷ்பேக் ஆஃபர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கென ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிக தளங்கள் மற்றும் கடைகளில் இருக்கும் பே.டி.எம் நிறுவனத்தின் னிஸி சிஷீபீமீ -ஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த கேஷ் பேக் ஆஃபர் உள்ளதாக கூறியுள்ள பே.டி.எம், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் இந்த கேஷ்பேக் ஆஃபர் இருக்கும் எனக் கூறியுள்ளது.
தீபாவளிக்கு முன்பாக பே.டி.எம் செயலி மூலம் அதிக பணப்பரிவர்த்தனையை செய்யும் வணிகர்கள், டாப் மெர்ச்ன்டஸ் என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு இலவசமாக சவுண்ட் பாக்ஸ் மற்றும் மிஷீஜி சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கூடுதலாக வழங்கப்
பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவிக் கொண்டிருக்கும் அனைத்து வர்த்தகர்களையும் அங்கீகரிக்கும் ஒரு சிறு முயற்சி இது என அந்நிறுவனம் கூறியுள்ளது.