திருச்சியில் விரைவில் சி.எம்.டி.ஏ. அலுவலகம் – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் 2022&23ம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது . இவ்விழாவில் அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , புதிய பொறுப்பாளர்களுக்கு பதவியேற்பு செய்து வைத்து சிறப்புரையாற்றினார் . அதன்படி புதிய தலைவராக கார்த்திக் பதவியேற்று கொண்டார் . மேலும் சங்க செயலாளராக வெங்கடேசன், பொருளாளராக விஸ்வநாத், துணைத் தலைவராக சுரேஷ்குமார் , இணை செயலாளராக ஜெயராம் மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது : பொருளாதார வளர்ச்சிக்கு, ஒரு அரசுக்கு கட்டுமான சங்கங்கள் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருகின்றன . இது உங்களது தொழில் என்று இருந்தாலும் கூட நீங்கள் செய்கின்ற பணி நாட்டிற்கு மிக முக்கியமானது . தொழிற்சாலைகளுக்கு உங்கள் மூலமாக அதிக அளவில் வேலை வாய்ப்பை தருகிறீர்கள் .
திருச்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்க ளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் . திருச்சியில் விரைவில் சி.எம். டி.ஏ. அலுவலகம் அமைய உள்ளது . இதன் மூலம் உங்களுக்கு வேலைப்பளு குறையும் . மேலும் இருக்கிற இடத் திலேயே உங்களது பணியை செய்ய நல்ல வாய்ப்பாக இருக்கும் என அவர் பேசினார் .
விழாவில் திருச்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், மாநில கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் . முன்னதாக 2021-22 -ம் ஆண்டு நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். பட்டிமன்ற பேச்சாளர் அனுகிரகாவின் சிறப்புரையும் நடைபெற்றது .