கச்சா எண்ணெய் சேமிப்பால் ரூ.5,000 கோடி மிச்சம்..!
2030ம் ஆண்டுக்குள், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலந்து விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை அடுத்து, உயிரி எரிபொருள் தேசிய கொள்கை திட்டத்தின் படி, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை அரசு ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து கரும்பு மற்றும் உணவு தானியங்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளது. கரும்பிலிருந்து பெறப்படும் எத்தனால், சேதமடைந்த மற்றும் கூடுதலாக உள்ள அரிசிகளில் இருந்து பெறப்படும் எத்தனால் போன்றவற்றுக்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-20ம் ஆண்டில், 173.03 கோடி லிட்டர் எத்தனால், பெட்ரோலுடன் கலப்பதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போது, நாட்டில் உள்ள பெட்ரோலிய சேமிப்புக் கிடங்குகளில் முழு கொள்ளளவுக்கு கச்சா எண்ணெய்கள் வாங்கி நிரப்பப்பட்டன. இதன் மூலம் சுமார் ரூ.5,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.